மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு அறிவிப்பு : முதல்வருக்கு நன்றி.

Published Date: December 19, 2024

CATEGORY: CONSTITUENCY

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு அடுத்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதற்காக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவரது தாயும், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழு தலைவருமான ருக்குமணி பழனிவேல் ராஜன் குடும்பத்தினர், சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த தகவலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

Media: Dinamani